×

திண்டுக்கல் அருகே வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி: போலீசார் விசாரணை

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் பட்டப்பகலில் வங்கி ஊழியர்களை கட்டிப்போட்டு கொள்ளை முயற்சி செய்த இளைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள வங்கியில் இந்த கொள்ளை சம்பவம் நடந்து இருக்கிறது.

திண்டுக்கல் தாடிக்கொம்பு சாலையில் உள்ள இந்தியன் ஓவர்சிஸ் வங்கி செயல்பட்டு வருகின்றது. இந்த வங்கியில் எப்பொழுதும் பொதுமக்கள் கூட்டம் 24 மணி நேரமும் இருக்கக்கூடிய பிரதான சாலையாக அமைந்து வருகிறது, வங்கியில் இன்று காலை ஒரு இளைஞர் ஒருவர் திடீர் என உள்ளே நுழைந்து இருக்கின்றார் அவரிடம் மிளகாய் போடி, பேப்பர் ஸ்பிரே மற்றும் கட்டிங் பிளேடு கூறிய ஆயுதங்கள் கத்தி உள்ளிட்ட பொருட்கள் கொண்டு உள்ளே சென்று மிளகாய் போடி எடுத்து தூவியப்படி வங்கி முழுவதும் தூவி இருக்கிறார். அப்பொழுது வங்கி ஊழியர்கள் 3 நபர்கள் மட்டும் வங்கியில் இருந்து இருக்கிறார்கள்.

அப்பொழுது 3 நபர்களுக்கும் மிளகாய்ப்பொடியை தூவியுடன் அப்பொழுது அவர் வைத்திருந்த பிளாஸ்டிக் டேப்பை கொண்டு கைகளை காட்டியபடி நார்களிலில் அமரவைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளார். பிறகு வங்கி ஊழியர்கள் அந்த பிளாஸ்டிக் டேப்பை அறுத்துவிட்டு வெளியே வந்து கூச்சலிட்டு அங்கு இருக்கக்கூடிய வங்கி காவலாளி மற்றும் அருகில் இருந்து பொது மக்கள் எல்லாம் ஒன்றாக சேர்ந்து வங்கி உள்ள நுழைந்து அந்த கொள்ளையரை பிடித்து திண்டுக்கல் நகர் மேற்கு காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர்.

இதையடுத்து மேற்கு காவல் நிலைய போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அங்கு கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுருந்த நபரை விசாரித்த போது அவர் திண்டுக்கல் மாவட்டம் அருகே உள்ள பூச்சிநாயகம் பட்டி சேர்ந்த கலீல் ரகுமான் வயது 25 என்பது தெரியவந்துள்ளது. அவரிடம் தொடர்ந்து காவல் துறையினர் விசாரணை நடத்தி வந்தபோது அப்பொழுது அவர் கூறியது மிகவும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது, வாழ்க்கையில் ஏற்பட்ட விரக்தியால் பல சினிமா படங்களை பார்ப்பது தெரியவந்துள்ளது. சமீபத்தில் துணிவு திரைப்படம் பார்த்து கொள்ளையடிக்க வந்ததாக அவர் கூறிய அதிரிச்சி  தகவல் வெளியாகியுள்ளது.  


Tags : Didigukal , Attempted robbery of bank employees near Dindigul: Police investigation
× RELATED மயிலாடுதுறை – திண்டுக்கல் தினசரி...